மேலும் செய்திகள்
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., பொதுக்கூட்டம்
12-Mar-2025
விக்கிரவாண்டி : காணை அடுத்த ஒன்றியம் கெடாரில் இளைஞரணி சார்பில் தி.மு.க., கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.மத்திய அரசை கண்டித்து இளைஞரணி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தினகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் முருகன், கோலியனுார் மும்மூர்த்தி, விக்கிரவாண்டி வேம்பி ரவி, ரவிதுரை, ஜெயபால், ஒன்றிய சேர்மன்கள் கலைச்செல்வி, சங்கீத அரசி ரவிதுரை, நகர செயலாளர் நைனாமுகமது முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜா வரவேற்றார்.கூட்டத்தில் மும்மொழி கொள்கை எதிர்ப்பு, தொகுதி மறுவரையறை, மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியில் பாரபட்சம் குறித்து தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி, அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அப்துல் மாலிக், தலைமைக் கழக பேச்சாளர்கள் சூர்யா கிருஷ்ணமூர்த்தி, ரோஜா ஆகியோர் பேசினர்.மாவட்ட துணைச் செயலாளர்கள் முருகன், கற்பகம், மாநில மகளிர் அணி பிரசார குழு செயலாளர் தேன்மொழி, வழக்கறிஞர் சுரேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அப்துல்சலாம், செல்வராஜ், விசுவநாதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பாலாஜி, அன்பு, ராஜவேல், கலைவாணன், பிரேம், தேவேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். துணைச் சேர்மன் பாலாஜி நன்றி கூறனார்.
12-Mar-2025