மேலும் செய்திகள்
முதல்வர் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவி வழங்கல்
12-Mar-2025
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியத்தில் முதல்வர் பிறந்த நாளையொட்டி, தெற்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியம் டி. ராதாபுரம், தொரவி, சிந்தாமணி ஆகிய இடங்களில் நடந்த நிகழ்ச்சிக்கு, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்கி கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.தொடர்ந்து, குழந்தைகளுக்கு தங்க மோதிரம், பயனாளிகளுக்கு வேட்டி, சேலை, அரிசி ஆகியவற்றை வழங்கி பேசினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி துரை வரவேற்றார்.அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவி துரை, துணைச் சேர்மன் ஜீவிதா ரவி, ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ஜெயபால், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன்.கண்காணிப்பு குழு எத்திராசன், சிற்றுாராட்சி சங்க தலைவர் சங்கர், பானுப்பிரியா, சீனிவாசன், கஜேந்திரன்,இளைஞர் அணி அமைப்பாளர் பாரதி, சபரி, தொழில் நுட்ப அணி சாம்பசிவம், கபிலன்.கிளைச் செயலாளர் சரவணன், பாபு, ஒன்றிய தலைவர்கள் முரளி, ராஜமாணிக்கம், மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், தனஞ்செயன், ஒன்றிய கவுன்சிலர்கள் செந்தில்குமார், அன்பரசி, கஸ்தூரி, மகேஸ்வரி, ராஜசேகர் சபரி, அருண் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
12-Mar-2025