உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., இளைஞரணி சாதனை விளக்க பொதுக்கூட்டம்

தி.மு.க., இளைஞரணி சாதனை விளக்க பொதுக்கூட்டம்

மயிலம்; மயிலம் ஒன்றிய தி.மு.க., இளைஞரணி சார்பில், பாதிராப்புலியூரில் தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் சேதுநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், செழியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வெற்றிச்செல்வன் வரவேற்றார். மயிலம் சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன்,கவுன்சிலர் வசந்தா, மாவட்ட பிரதிநிதி சசிகுமார்,ஆகியோர் துவக்க உரையாற்றினர். கூட்டத்தில் எம்.எல்.ஏ., மஸ்தான் சிறப்புரையாற்றினார். தலைமை கழக பேச்சாளர்கள் சரத்பாலா, ஷாநவாஸ் ஆகியோர் அரசின் சாதனைகளை விளக்கி பேசினர். மாவட்ட அவைத் தலைவர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி,மயிலம் சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வகுமார், தலைமை தீர்மான குழு உறுப்பினர் சிவா, சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அன்சாரி, தொ.மு.ச., நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி, மயிலம் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வெங்கடேஷ், ஆனந்தராஜ், நிர்மல்குமார், வெண்ணியப்பன், மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை