மேலும் செய்திகள்
தி.மு.க., பொதுக்கூட்டம்
27-Jun-2025
விக்கிரவாண்டி: விழுப்புரம் தெற்கு மாவட்ட நகர தி.மு.க., இளைஞரணி சார்பில் அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சார பொதுக் கூட்டம் நடந்தது.கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு விக்கிரவாண்டியில் நடந்த கூட்டத்திற்கு, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கினார். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, பேரூராட்சி துணை சேர்மன் பாலாஜி முன்னிலை வகித்தனர். நகர இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் வரவேற்றார்.தலைமை கழக பேச்சாளர்கள் அன்பரசு, அஸ்வின்குமார், அரசின் சாதனைகளை விளக்கி பேசினா். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி, மாவட்ட விவசாய அணி தலைவர் பாபு ஜீவானந்தம், நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, நகர செயலாளர் நைனா முகமது, துணை செயலாளர்கள் சுரேஷ்குமார், பிரசாத், சித்ரா, பொருளாளர் பாபுஜி பாண்டியன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வீரசேகரன், இளவரசன், உதயநிதி பாலு, நீலநாராயணன், பேரூராட்சி முன்னாள் சேர்மன் மலர்மன்னன், மாவட்ட அணி நிர்வாகிகள் சுதாகர், அரிகரன், ராஜபாண்டியன், செல்வம், சிவா, யுவராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள் சுதா, ஆனந்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சிவசந்திரன் நன்றி கூறினார்.
27-Jun-2025