உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இறால் பண்ணையில் டிரைவர் தற்கொலை

இறால் பண்ணையில் டிரைவர் தற்கொலை

கோட்டக்குப்பம்; கோட்டக்குப்பம் அருகே இறால் பண்ணையில் டிரைவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிஞ்சிப்பாடி, பிள்ளைப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மரியதாஸ் மூன்றாவது மகன் வின்சட்ராஜ், 42; இவர் கடந்த 3ம் தேதி புத்துப்பட்டு அடுத்த முதலியார்குப்பத்தில் உள்ள தனியார் இறால் பண்ணையில் தற்காலிக ஓட்டுனராக பணிக்கு சேர்ந்து அங்கேயே தங்கி பணியாற்றி வந்தார் இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை வின்சட்ராஜ், தங்கியிருந்த இறால் கம்பெனி அறையில் உள்ள மின் விசிறியில் துாக்குப்போடு தற்கொலை செய்து கொண்டார். கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து வின்சட்ராஜ் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை