உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மத்திய அரசின் சட்ட மசோதாவை திரும்ப பெறக் கோரி ஓட்டுநர்கள், கலெக்டருக்கு மனு

மத்திய அரசின் சட்ட மசோதாவை திரும்ப பெறக் கோரி ஓட்டுநர்கள், கலெக்டருக்கு மனு

விழுப்புரம்: தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஓட்டுநர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள், மத்திய அரசின் புதிய சட்ட மசோதாவை திரும்ப பெறக் கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஓட்டுநர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள், அளித்த மனு: மத்திய அரசு லோக்சபா குளிர்கால கூட்ட தொடரில் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் கொண்டு வந்த புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். விபத்து வாகன ஓட்டிகளால் மட்டும் நடப்பதில்லை. இதற்கு பெரும்பாலும் இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தான் அதிக காரணம். ஓட்டுனர்களுக்கு எதிரான இந்த சட்டத்தை மத்திய அரசு முழுமையாக திரும்ப பெறும்வரை, நாங்கள் பணி செல்ல போவதில்லை. மத்திய அரசு கொண்டு வந்த ஹிட் மற்றும் ரன் புதிய சட்டமசோதாவை திரும்ப பெற வேண்டும். ஓட்டுநர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றுதல், தேசிய ஓட்டுநர்கள் தினம் கொண்டாட வேண்டும். தபால் ஓட்டுரிமை வழங்குதல் உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தி விரைவில் உண்ணாவிரத போராட்டமும், தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ