உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  போதை பொருள் விழிப்புணர்வு முகாம்

 போதை பொருள் விழிப்புணர்வு முகாம்

செஞ்சி: -: அனந்தபுரம் கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடந்தது. அனந்தபுரம், பனமலை கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் பாலியல் வன்கொடுமை, போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடந்தது. தாளாளர் சேகர் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சுஜாதா சேகர் முன்னிலை வகித்தார். சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு துணை ஆய்வாளர் தவமணி , தலைமை காவலர் அழகுவேல் ஆகியோர் விளக்க உரை நிகழ்த்தினர். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி