உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆரோவில்லில் போதை மாத்திரைகள் பறிமுதல்

ஆரோவில்லில் போதை மாத்திரைகள் பறிமுதல்

விழுப்புரம், : ஆரோவில் அருகே போதை மாத்திரைகளை விற்பனை செய்த வாலிபரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட சர்வதேச நகரான ஆரோவில் பகுதியில், போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை நடைபெறுவதாக, சென்னையில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சென்னை மண்டல இயக்குனர் அரவிந்தன் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் ஆரோவில் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் மனோஜ்குமார் உள்ளிட்ட குழுவினர், கடந்த 20ம் தேதி ஆரோவில் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள தனியார் ரெஸ்டாரண்ட் அருகே நின்றிருந்த வாலிபரைப் பிடித்து விசாரித்தனர்.அதில், புதுச்சேரி உருளையன்பேட்டையைச் சேர்ந்த சுப்புராயன் மகன் மணிகண்டன், 34; என்பதும், அவர், போதை மாத்திரைகள் விற்றதும் தெரிய வந்தது. மணிகண்டனை கைது செய்து, 785 கிராம் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.மேலும், பெரிய முதலியார்சாவடி, சின்ன முதலியார்சாவடி ஆகிய இடங்களில், மணிகண்டன் நடத்தி வரும் மருந்து கடைகளில் சோதனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி