உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / துரோனா பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழா

துரோனா பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழா

விழுப்புரம்; விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகே விஸ்வலிங்கம் லே அவுட் பகுதியில் துரோனா பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழா நடந்தது. துரோனா பல்நோக்கு மருத்துவமனையை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார். நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், லட்சுமணன், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், கூடுதல் ஆட்சியர் பத்மஜா, ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலர் புஷ்பராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இம்மருத்துவமனையில் சர்வதேச தரத்தில் சிறந்த அறுவை சிகிச்சை 2 அரங்கங்கள் உள்ளது. 24 மணி நேரமும் இயங்க கூடிய தீவிர சிகிச்சை பிரிவு (ஐ.சி.யூ.,), டாக்டர்கள், செவிலியர்கள் பணியில் உள்ளனர். பச்சிளம் குழந்தைகளுக்கு பிரத்யேக வார்டுகள், குழந்தை பேறுவிற்கு தனியாக வார்டுகளும், எக்ஸ்ரே, அல்ட்ரா ஸ்கேனிங், லேப்ராஸ்கோப்பிக் மூலம் அறுவை சிகிச்சை அளித்து நோயாளிகள் 24 மணி நேரத்திற்குள் வீட்டிற்கு செல்லும் வகையில் சிறப்பான மருத்துவம் அளிக்கப்படுகிறது. விழாவில், பொது அறுவை சிகிச்சை டாக்டர் தீபு தியாகராஜன், டாக்டர்கள் சவுமியா, கீர்த்தி தியாகராஜன், சந்திரகலா, பாலசுப்ரமணியன், காவியா, துரோனா தியாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி