உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பிட்டுக்கு மண் சுமந்த விழா

பிட்டுக்கு மண் சுமந்த விழா

திருவெண்ணெய்நல்லுார் : மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவெண்ணெய்நல்லுாரில், 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆவணி மூல நட்சத்திரத்தையொட்டி சிவன் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா நடந்தது. இதனையொட்டி காலை 10:30 மணியளவில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, மாலை 3:00 மணியளவில் மாட வீதி வழியாக சுவாமி வீதியுலா வந்து, மலட்டாறு கரையில் எழுந்தருளினர். அங்கு சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை