உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சியில் இன்று கல்விக்கடன் மேளா

செஞ்சியில் இன்று கல்விக்கடன் மேளா

விழுப்புரம்: மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளும் இணைந்து, செஞ்சியில் இன்று கல்விக்கடன் மேளா நடத்த உள்ளதாக, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளும் இணைந்து இன்று, செஞ்சி தாலுகா ஆலம்பூண்டி ஸ்ரீ ரங்கபூபதி பொறியியல் கல்லுாரியில் மாபெரும் கல்விக்கடன் மேளாவை நடத்துகிறது. இந்த முகாமில், குறைவான வட்டி விகிதம்; 15 ஆண்டு தவணைக்காலம்; செயலாக்க கட்டணம்; உடனடி கடன் வழங்குதல்; ஆகிய அம்சங்களுடன் ரூ.7.50 லட்சம் வரை வங்கி விதிமுறைகளுக்குட்பட்டு வழங்கப்படுகிறது. கல்விக்கடன் பெறுவதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோரின் பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை சமர்பித்து கல்வி கடனை பெற்று பயன்பெறலாம். மாணவர்கள் தேவையான ஆவணங்களை https://pmvidyalaxmi.co.in/StudentLogin.aspxvd;w என்ற இணையதளத்தில் பதிவு செய்து சமர்ப்பித்து கடன் அனுமதி ஒப்புகை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி