மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
16-Oct-2024
திண்டிவனம்: திண்டிவனம் அருகே வாய் பேச முடியாத பெண்ணை பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு பிறவியிலேயே காது கேட்காது, வாய் பேச முடியாது. இவர் கடந்த 4ம் தேதி 3:30 மணியளவில் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது கீழ்காரணை கிராமத்தைச் சேர்ந்த சக்கரபாணி, 69; என்பவர் வீட்டிற்குள் நுழைந்து, அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தபோது சங்கரபாணி தப்பியோடினார். புகாரின் பேரில், திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து சக்கரபாணியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
16-Oct-2024