உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் மோதி முதியவர் பலி

பைக் மோதி முதியவர் பலி

விழுப்புரம், : திண்டிவனம் அருகே பைக் மோதி முதியவர் இறந்தார்.திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தைச் சேர்ந்த சாமிகண்ணு, 75; இவர் நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு செஞ்சி செல்ல குடும்பத்தோடு, திண்டிவனம் - செஞ்சி சாலையில் ஓரமாக பஸ்சுக்காக நின்றிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த பைக், சாமிக்கண்ணு மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர் இறந்தார். ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

மேலும் ஒரு விபத்து

வெள்ளிமேடுபேட்டை அடுத்த வடசிறுவலுாரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 60; விவசாயி. இவர், நேற்று காலை வெள்ளிமேடுபேட்டையிலிருந்து தெள்ளார் நோக்கி தனது நிலத்திற்கு நடந்து சென்ற போது பின்னால் வந்த லாரி ஆறுமுகம் மீது மோதியது. படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை