மேலும் செய்திகள்
கார் மோதி முதியவர் பலி
14-Nov-2024
மரக்காணம் : திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் இறந்தார்.திண்டிவனம் அடுத்த மன்னார்சாமி கோவிலைச் சேர்ந்த ராஜேந்திரன், 64; இவர், நேற்று காலை 5:30 மணிக்கு திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் நோக்கி நடைபயிற்சி சென்றார்.அப்போது, மானுார் அருகே ராஜேந்திரன் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், படுகாயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
14-Nov-2024