மொபட் மீது வேன் மோதி முதியவர் பலி
விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டி அருகே மொபட் மீது வேன் மோதி ஒருவர் இறந்தார்.விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளி தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ், 62; சைக்கிள் பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். இவர், 20ம் தேதி மாலை சொந்த வேலை காரணமாக மொபட்டில் சென்றவர், சென்னை - திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் மொபெட் மீது மோதியது.படுகாயமடைந்த ராமதாஸ் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் இரவு இறந்தார்.விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.