மேலும் செய்திகள்
கார் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி பலி
27-May-2025
மயிலம்; மயிலம் அருகே உள்ள ஜக்காம்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இரு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.காயல்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் மஹாபு, 70; இவர் நேற்று சென்னைக்கு சென்று, உறவினர்களுடன் காயல்பட்டினத்திற்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தார். இவர்கள் வந்த கார் நேற்று காலை 8:00 மணியளவில் மயிலம் அடுத்த ஜக்காம்பேட்டை குளக்கரை அருகே வந்த போது முன்னாள் சென்ற காரின் டிரைவர் திடீரென பிரேக்போட்டதால் , பின்னால் சாலையில் வந்து கொண்டிருந்த கார் எதிரே சென்ற கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பின்னால் வந்த காரில் பயணம் செய்த மஹாபு 70; சுனைவான் குழந்தைகள் மஹாபுஹிசம் 8; ஜனத் 3; மற்றும் சாலையில் நடந்து சென்ற ஜக்காம்பேட்டை கிராமத்தை சேர்ந்த கண்ணன், 75; ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மஹாபு இறந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
27-May-2025