உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மதுபாட்டில் கடத்தல்; மூதாட்டி கைது

மதுபாட்டில் கடத்தல்; மூதாட்டி கைது

திருக்கோவிலுார்; அரகண்டநலலுார் அருகே, பஸ்சில் மது பாட்டில்கள் கடத்தி வந்த மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலுார் செல்லும் தனியார் பஸ்சில் பெண் ஒருவர் மது பாட்டில்களை கடத்திச் செல்வதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அரகண்டநல்லுார் சப் இன்ஸ்பெக்டர் குருபரன் மற்றும் போலீசார் முகையூரில் அந்த பஸ்சை நிறுத்தி சோதனை நடத்தினர். மூதாட்டி பஸ்சில் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் மது பாட்டில்கள் இருந்தன. விசாரித்ததில், முகையூரைச் சேர்ந்த பிலவேந்திரன் மனைவி எலிசபெத் ராணி, 67; என தெரிய வந்தது. புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை விற்பனை செய்ய கடத்தி வந்ததாக தெரிவித்தார். அவரிடம் இருந்து 120 பிராந்தி பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். எலிசபெத் ராணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை