மேலும் செய்திகள்
வாகனம் மோதி ஒருவர் பலி
18-May-2025
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி ராணி, 70; இவர், நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் பெரியசெவலையில் உள்ள கல்பரதேசி கோவிலுக்கு நடந்து சென்றார்.கோவில் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த ராணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
18-May-2025