உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பூச்சிக் கொல்லி மருந்து குடித்த மூதாட்டி பலி

பூச்சிக் கொல்லி மருந்து குடித்த மூதாட்டி பலி

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை அருகே பூச்சிக் கொல்லி மருந்து குடித்த மூதாட்டி இறந்தார். அவலுார்பேட்டை அடுத்த மேல்செவலாம்பாடி கிராமத்தை சேர்ந்த ராஜி மனைவி தஞ்சையம்மாள், 70; கால் வலியால் நீண்ட நாளாக அவதிப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வலி தாங்க முடியாமல் நிலத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். சேத்பட் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட தஞ்சையம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை