மேலும் செய்திகள்
குறைகேட்பு முகாம்
16-Jun-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில் குறைதீர் கூட்டத்தில் மின்நுகர்வோர் பங்கேற்று, மனுக்களை அளித்தனர்.விழுப்புரம் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்தில், கோட்ட அளவில் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது.இதில் மேற்பார்வை பொறியாளர் நாகராஜ்குமார் தலைமை தாங்கி மனுக்களை பெற்றார். கோட்ட செயற்பொறியாளர் நாகராஜன், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் மற்றும் உதவி பொறியாளர்கள் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மின் கட்டணம் நிர்ணயித்ததில் குறைபாடுகள், வீடுகளுக்கான புதிய மின் இணைப்பு உள்ளிட்ட, கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன. இதன் மீது சம்மந்தப்பட்ட உதவி பொறியாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க, மேற்பார்வைபொறியாளர் உத்தரவிட்டார்.
16-Jun-2025