உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின் ஊழியர் மத்திய அமைப்பின் பேரவை கூட்டம்

மின் ஊழியர் மத்திய அமைப்பின் பேரவை கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரம் மா.கம்யூ., அலுவலகத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பேரவை கூட்டம் நடந்தது.பேரவை கூட்டத்திற்கு சங்க மாநில துணை தலைவர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். துணை பொதுச் செயலாளர் பழனிவேல், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் மூர்த்தி, திட்ட செயலாளர் சேகர், திட்ட சிறப்பு தலைவர் சிவசங்கரன், பொருளாளர் ஏழுமலை, இணை செயலாளர்கள் அருள், சத்தியசீலன், ஞானவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.தமிழக மின் வாரியம் பொதுத்துறையாக நீடிப்பதற்கு, அரசாணை 100ஐ ரத்து செய்ய வேண்டும், பொதுமக்களை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மின் வாரியத்தில் காலியாக உள்ள 62- ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.கள உதவியாளர் பணியிடத்தில் ஒப்பந்த ஊழியர்களை கொண்டு நிரப்பி, பகுதி நேர பணியாளர்களை நிரந்தரபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி