விழுப்புரம் : விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் அமைப்பு, மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மாநிலச் செயலாளர் அன்பழகன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்ட செயலாளர் சேகர், பொறியாளர் அமைப்பின் மாவட்ட செயலாளர் அய்யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், மின்வாரிய பணியாளர்களை பாதிக்கின்ற முத்தரப்பு ஒப்பந்தத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மின் வாரியத்தை தனித்தனி கம்பெனிகளாக பிரிப்பதை கண்டிப்பது. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. செஞ்சி
மின் வாரிய செயற் பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மின்வாரிய கோட்ட தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். பொறுப்பாளர் கன்னியப்பன் முன்னிலை வகித்தார். விழுப்புரம் சிறப்பு திட்ட தலைவர் சிவசங்கர் மற்றும் ஓய்வு பெற்ற நல அமைப்பின் விழுப்புரம் திட்ட தலைவர் ஜெயராமன், ஓய்வு பெற்ற நல அமைப்பின் கோட்ட தலைவர் சக்திவேல், கோட்ட செயலர் ஏழுமலை ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் பங்கேற்றனர். கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்ட செயலாளர் ராஜாமணி தலைமை தாங்கினார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். துணைதலைவர்கள் சலீம், ஏழுமலை, துணைச் செயலாளர்கள் சிவக்குமார், சுதர்சனன், கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.