மேலும் செய்திகள்
கண்டன ஆர்ப்பாட்டம்
4 hour(s) ago
வேலுநாச்சியார் நினைவு தினம் த.வெ.க., அனுசரிப்பு
4 hour(s) ago
தர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதியில் மண்டல பூஜை
4 hour(s) ago
ரங்கபூபதி கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா
4 hour(s) ago
விழுப்புரம் : விழுப்புரம் கோர்ட்டில் நடைபெற்று வரும் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அன்று நேரில் ஆஜராகி வாதத்தை முன்வைக்க உத்தரவிட்டார்.பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு தந்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ்தாசுக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,500 அபரதமும், முன்னாள் எஸ்.பி., கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதனை எதிர்த்து இருவரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதில், அரசு தரப்பு மற்றும் முன்னாள் எஸ்.பி., தரப்பில் வாதம் முடிந்த நிலையில், வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டி முன்னாள் டி.ஜி.பி., தரப்பில் சென்னை ஐகோரட்டை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடியானது.அதனைத் தொடர்ந்து முன்னாள் டி.ஜி.பி., மீதான மேல்முறையீட்டு வழக்கு நேற்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் டி.ஜி.பி., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை எடுத்துக்கூறி மெமோ தாக்கல் செய்தார். இதை பதிவு செய்த நீதிபதி பூர்ணிமா, வழக்கு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்தி வைத்து, அன்று முன்னாள் டி.ஜி.பி., மற்றும் அவர் தரப்பு வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க உத்தரவிட்டார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago