உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அவதுாறு வழக்கு விசாரணை மாஜி அமைச்சர் கோர்ட்டில் ஆஜர்

அவதுாறு வழக்கு விசாரணை மாஜி அமைச்சர் கோர்ட்டில் ஆஜர்

விழுப்புரம் : அவதுாறு வழக்குகளின் விசாரணைக்கு அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.விழுப்புரம் மாவட்டத்தில் ஆரோவில், கோட்டக்குப்பம், கோலியனுார் பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகம் தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் அவதுாறாக பேசியதாக, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த மூன்று வழக்குகளும் நேற்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சண்முகம் எம்.பி., ஆஜரானார். அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் ஆஜராகி, ஆரோவில், கோட்டக்குப்பம் வழக்குகளை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான உத்தரவு வரும் வரை இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும். கோலியனுார் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி மனு தாக்கல் செய்தனர். நீதிபதி (பொறுப்பு) இளவரசன், விசாரணையை வரும் நவ., 25ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும், கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகிலும், அதே ஆண்டு செப்., 18ம் தேதி திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வரை பற்றி அவதுாறாக பேசியதாக சண்முகம் எம்.பி., சக்கரபாணி எம்.எல்.ஏ., மீது விழுப்புரம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடரப்பட்டது. இந்த இரு வழக்குகளும் நேற்று விசாரணைக்கு வந்தது. சண்முகம் எம்.பி., சக்கரபாணி எம்.எல்.ஏ., ஆஜராகினர்.அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் ஆஜராகி, இந்த வழக்குகளில் சண்முகம் எம்.பி., ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறினர். இதற்கு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்தனர். பின், விசாரணையை வரும் நவ., 12ம் தேதிக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட் ராதிகா உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை