உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நீதிமன்ற ஊழியர்கள் நியமனத்துக்கான தேர்வு

நீதிமன்ற ஊழியர்கள் நியமனத்துக்கான தேர்வு

விழுப்புரம்: விழுப்புரத்தில் நீதிமன்ற ஊழியர்கள் நியமனத்துக்கான எழுத்துத் தேர்வு நடந்தது.தமிழகத்தில் நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர், தோட்ட பராமரிப்பாளர், கடைநிலை பணியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நேற்று முன்தினம் தொடங்கி இரண்டு நாட்கள் நடந்தது. மாவட்டத்தில், இரண்டாவது நாளாக நேற்று துப்புரவு பணியாளர், நீரேற்றுனர், இரவு காவலர், தோட்ட பராமரிப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடந்தது.விழுப்புரம் அரசு கலை அறிவியல் கல்லுாரி, எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கல்லுாரி, அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரி ஆகிய 4 மையங்களில், காலை 10:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை தேர்வு நடந்தது. இந்த தேர்வில் 3,330 பேர் பங்கேற்றனர்.இந்த தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) இளவரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை