உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ராஜா தேசிங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில் கண்காட்சி

ராஜா தேசிங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில் கண்காட்சி

செஞ்சி: களையூர், நாட்டார்மங்கலம் ராஜா தேசிங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில் அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி நடந்தது.கல்விக் குழும தலைவர் பாபு தலைமை தாங்கி கண்காட்சியை துவக்கி வைத்தார். செயலாளர் அய்யப்பன், பொருளாளர் அண்ணாமலை முன்னிலை வகித்தனர். பாலிடெக்னிக் முதல்வர் கார்த்திகேயன் வரவேற்றார்.அறக்கட்டளை உறுப்பினர்கள் ராஜாராம், அங்கவை பாபு, அரவிந்தன், வெங்கடசுப்ரமணியன் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.மாணவ, மாணவிகள் தொழில் சார்ந்த புதிய தொழில் நுட்பங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய அறிவியல் படைப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர். செஞ்சி மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருந்து அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுடன் கண்காட்சியை பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ