உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேசிய நெடுஞ்சாலைக்கு கூடுதலாக நிலம் எடுப்பு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் வலியுறுத்தல்

தேசிய நெடுஞ்சாலைக்கு கூடுதலாக நிலம் எடுப்பு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் வலியுறுத்தல்

விழுப்புரம் : விழுப்புரம் அருகே வி.கே.டி., சாலைக்கு, அனுமதியின்றி விவசாய நிலத்தை கூடுதலாக எடுத்துள்ளதற்கு விவசாயிகள் இழப்பீடு கோரியுள்ளனர்.விக்கிரவாண்டி - கும்பகோணம் நான்கு வழிச்சாலையில், விக்கிரவாண்டி முதல் சின்னக்கள்ளிப்பட்டு வரை நடந்து வரும் சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகள் மிக தாமதமாக நடந்து வருகிறது.இந்த சாலையில், விழுப்புரம் அருகே வாணியம்பாளையம் பகுதியில், ஓட்டேரிபாளையம் கிராம சாலை குறுக்கிடும் இடத்தில் பாலமும், அதன் ஓரமாக சர்வீஸ் சாலையும் அமைத்து வருகின்றனர்.அந்த பகுதியில் குறுகிய இடமாக இருப்பதால், நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்திய விவசாய நிலத்தைக் கடந்து, கூடுதலான இடத்தை பயன்படுத்தி சாலை பணிகள் நடந்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைக்கு, எங்கள் கிராம விவசாய நிலப்பகுதியில் குறிப்பிட்ட சர்வே எண்களில் நிலத்தை கையகப்படுத்தி, சாலை அமைத்து வருகின்றனர்.இந்த மேம்பாலம் பகுதியில், கையகப்படுத்திய அளவை கடந்து, பட்டா நிலப்பகுதியில், அனுமதியின்றி சர்வீஸ் சாலை போடும் பணிக்கு கூடுதல் நிலத்தை பயன்படுத்தியுள்ளனர். நில அளவை துறை மூலம் அளவீடு செய்தபோது அது உறுதியாகியுள்ளது.அந்த இடத்தில் சாலை குறுகியுள்ளதால், அங்கு சாலையோர வாய்க்கால் அமைக்கும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இது குறித்து, நடவடிக்கை எடுத்து, இழப்பீடு கோரி, முதல்வரின் தனி பிரிவுக்கும், தேசிய நெடுஞ்சாலை நிலம் கையகப்பிரிவிலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை