மகனை தாக்கிய தந்தை கைது
விழுப்புரம்,: தகராறில் மகனை தாக்கிய தந்தையை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அடுத்த ஆனாங்கூரை சேர்ந்தவர் வேல்கந்தன், 45; கூலி தொழிலாளி. இவரது தந்தை முனுசாமி, 65; பொது வீட்டுமனையை மகள் ஆனந்திக்கு, 30; கிரையம் கொடுத்துள்ளார். இதையடுத்து, தனது பாகத்தை கேட்ட வேல்கந்தனை, தந்தை முனுசாமி மற்றும் சகோதரி ஆனந்தி ஆகியோர் திட்டி தாக்கி மிரட்டல் விடுத்தனர். விழுப்புரம் தாலுகா போலீசார் முனுசாமி, ஆனந்தி மீது வழக்குப் பதிந்து முனுசாமியை கைது செய்து விசாரிக்கின்றனர்.