மேலும் செய்திகள்
பட்டதாரி பெண் மாயம்
14-Sep-2025
விழுப்புரம் : விழுப்புரத்தில் மனநலம் பாதித்த மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார். விழுப்புரம் எஸ்.பி.எஸ்., நகரைச் சேர்ந்தவர் ராஜப்பன் மகள் திவ்யபாரதி, 29; இவர், கடந்த 4 ஆண்டுகளான மனநலம் பாதித்து வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ராஜப்பன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
14-Sep-2025