உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு பிச்சை எடுக்கும் போராட்டம்

அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு பிச்சை எடுக்கும் போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடந்தது. நகராட்சி திடலில் நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். அபராஜிதன், மணிகண்ணன் கருத்துரை வழங்கினர். நெடுமாறன், ரவிச்சந்திரன், சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினர். இதில், தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதிபடி, அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படி, மருத்துவப்படி, மருத்துவக்காப்பீடு செலவு தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தீனவெண்மதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை