உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இறந்த ஏட்டு குடும்பத்திற்கு சக போலீசார் நிதியுதவி

இறந்த ஏட்டு குடும்பத்திற்கு சக போலீசார் நிதியுதவி

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே இறந்த தலைமைக் காவலர் குடும்பத்திற்கு சக போலீசார் நிதியுதவி வழங்கினர்.விக்கிரவாண்டி அடுத்த குத்தாம்பூண்டியைச் சேர்ந்தவர் சசிகுமார், 40; இவர், சென்னை தாம்பரம் மாநகர காவல் துறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சாலை விபத்தில் இறந்தார்.இவருடன் 2006ம் ஆண்டு பேட்ச்சில் பணியில் சேர்ந்த சக போலீசார் 'உதவும் உறவுகள்' என்ற அமைப்பின் சார்பில், இறந்த சசிகுமார் குடும்பத்திற்கு நிதியுதவியாக 14 லட்சத்து 66 ஆயிரத்து 611 ரூபாயை காசோலையாக வழங்கினர்.நிதியுதவி வழங்கிய போலீசாருக்கு சசிகுமார் மனைவி ரேவதி, மகன் நிஜந்தன், தந்தை ராமலிங்கம், தாய் செல்லம்மாள் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை