உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வித்யோதயா மழலையர் பள்ளியில் பண்டிகை கொண்டாட்ட காட்சியகம்

வித்யோதயா மழலையர் பள்ளியில் பண்டிகை கொண்டாட்ட காட்சியகம்

விழுப்புரம் : விழுப்புரம் வித்யோதயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 2024- 25ம் கல்வி ஆண்டுக்கான தேசிய விழாக்கள், பண்டிகைகள் கொண்டாட்ட காட்சியகம் நடந்தது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன் தலைமை தாங்கி, மாணவர்களை பாராட்டினார். பள்ளி முதல்வர் இளம்பிறை வரவேற்றார். வித்யோதயா கல்வியியல் கல்லுாரி தாளாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். வித்யோதயா கல்வியியல் கல்லுாரி இயக்குனர் ராஜி, விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரி இணை பேராசிரியர் விஜயரங்கம் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.ஆசிரியை மித்ரா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி