உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிளாப்பாக்கத்தில் வயல் தின விழா

கிளாப்பாக்கத்தில் வயல் தின விழா

வானுார்: ஆத்மா திட்டத்தின் கீழ் கிளாப்பாக்கம் கிராமத்தில் வயல் தின விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, வேளாண் உதவி இயக்குநர் எத்திராஜ் வரவேற்று, மத்திய, மாநில அரசு திட்டங்கள் குறித்து விளக்கினார். திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி விஜயகீதா பயிர்களின் முக்கிய ரகங்கள் மற்றும் சாகுபடி விபரம் குறித்தும், குறைந்த செலவில் அதிக மகசூல் பெறும் தொழில்நுட்பங்கள் குறித்தும் பேசினார். விழாவில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜி, கிளாப்பாக்கம் ஊராட்சி தலைவர் சித்ரா சதாசிவம் முன்னிலை வகித்து விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கினர். கிளாப்பாக்கம் ஊராட்சி செயளாளர் சிவகுமார், முன்னோடி விவசாயிகள் செல்வம், முருகன், சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆத்மா திட்ட அலுவலர்கள் வாழ்வரசி, கோவிந்தசாமி ஆகியோர் செய்திருந்தனர். துணை வேளாண்மை அலுவலர் செந்தில் குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை