உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தனியார் கெஸ்ட் ஹவுஸ் கட்டடத்தில் தீ விபத்து விழுப்புரத்தில் பரபரப்பு

தனியார் கெஸ்ட் ஹவுஸ் கட்டடத்தில் தீ விபத்து விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் தனியார் கெஸ்ட் ஹவுஸ் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கலெக்டர் பெருந்திட்ட வளாகம் அருகே மூன்று மாடி கொண்ட தனியார் கெஸ்ட் ஹவுஸ் கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தின் கீழ் மற்றும் முதல் தளத்தில் கடைகளும், 2, 3வது தளங்களில் கெஸ்ட் ஹவுஸ் ரூம்களும் உள்ளன.இந்த கட்டடத்தில் தற்போது புதுப்பிக்கும் பணிகள் நடக்கிறது. கட்டடத்தில் ரூம்களை துாய்மைபடுத்தும் பணிக்காக நேற்று காலை 9:00 மணிக்கு ஒருகோடி கிராமத்தை சேர்ந்த முத்துலட்சுமி, 55; ஏழுமலை மனைவி வீரம்மாள், 42; ஆகியோர் வந்துள்ளனர். இவர்களை உள்ளே கெஸ்ட் ஹவுசில் வைத்து பூட்டி விட்டு, வாட்ச்மேன் கடைக்கு சென்றுள்ளார். இரு பெண்களும் 11:30 மணிக்கு 3வது தளத்திற்கு ஏறிய போது புகை சூழ்ந்துள்ளதை அறிந்து, கீழே ஓடிவந்தனர்.அங்கு, பூட்டியிருந்ததை பார்த்து கூச்சலிட்டனர். உடன், அங்கிருந்த பொதுமக்கள் பூட்டை உடைத்து, அவர்களை மீட்டனர்.தகவல் அறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மின் இணைப்பை துண்டித்து, 3வது தளத்தில் உள்ள வெளிப்புற கண்ணாடிகளை புகையை வெளியேறுவதற்காக உடைத்தனர்.பின், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின் கசிவால் ஏற்பட்ட தீயில் ரூம்களில் இருந்த 'டிவி', பெட், கட்டில் என 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.விழுப்புரம் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !