உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சூதாடிய ஐந்து பேர் கைது

சூதாடிய ஐந்து பேர் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம், முல்லை தெரு பகுதியில் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடிய விழுப்புரம், விராட்டிக்குப்பம் பாதை பகுதியை சேர்ந்த முருகானந்தம்,43; பாலு,42; நடராஜன்,52; பார்த்தீபன்,42; பார்த்தீபன்,36; ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ஐந்தாயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி