மேலும் செய்திகள்
ஆட்டோ மோதல்: 3 பேர் காயம்
24-Sep-2024
வானூர்: ஆரோவில் அருகே தறிகெட்டு ஓடிய ஆட்டோ விபத்தில் ஐந்து பெண்கள் படுகாயமடைந்தனர்.கிளியனூர் அடுத்த அருவாப்பாக்கத்தை சேர்ந்த ஐந்து பெண்கள் நேற்று காலை 8;30 மணிக்கு (டிஎன்.32.என்.0191) என்ற பதிவெண் கொண்ட ஆட்டோவில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை அதே பகுதியை சேர்ந்த மரியதாஸ், 55; என்பவர் ஓட்டி வந்தார். திண்டிவனம்-புதுச்சேரி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ, மொரட்டாண்டி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு இறங்கி நுாறு மீட்டர் துாரத்திற்கு தாறுமாறாக ஓடியது.அப்போது, சாலையோரம் நடந்து சென்ற பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஒரு கட்டத்தில் ஆட்டோ விபத்துக்குள்ளாகி சாலையோரம் நின்றது. ஆட்டோவில் பயணித்த ஐந்து பெண்களும் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த ஆரோவில் போலீசார் மற்றும் பொது மக்கள் அவர்களை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஆரோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
24-Sep-2024