உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உணவு பாதுகாப்பு கலெக்டர் ஆலோசனை

உணவு பாதுகாப்பு கலெக்டர் ஆலோசனை

விழுப்புரம்; மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை சார்பில், உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். இதில், உணவு பாதுகாப்பு துறை மூலம் கடைகளுக்கு உரிமம் வழங்குதல், கடைகளின் உரிமங்களை புதுப்பித்தல், உரிமம் பெறாத கடைகளின் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுதல், குடிநீர் நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், உணவு மாதிரி பரிசோதனை செய்தல் மற்றும் மறுசுழற்சி செய்த எண்ணெய்களை சேகரித்தல் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை செய்து, அறிவுரைகளை அலுவலர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து, கலெக்டர் கூறியதாவது: மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தரமான உணவு பொருட்கள் வழங்குவதை தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் குடிநீர் கேன்களை மூன்று மாத ங்களுக்கு ஒருமுறை அல்லது 100 முறைக்கு குடிநீர் நிரப்பிய பின், இரண்டில் எது முதலில் வருகிறதோ அதன்படி கேன்களை கட்டாயம் புதிதாக மாற்ற வேண்டும். இதை முறையாக கண்காணித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில், மாவட்ட நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், வணிகர் சங்கம் மற்றும் நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ