மேலும் செய்திகள்
சிறுத்தையை கண்காணிக்க கேமரா
19-Jun-2025
ஆட்டுக்குட்டியை கடித்த மர்மவிலங்கு
21-Jun-2025
செஞ்சி: மர்ம விலங்கு தாக்கி கால்நடைகள் இறந்த கொங்கரப்பட்டு கிராமத்தில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் பொருத்தினர்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கொங்கரப்பட்டு கிராமத்தில் 27 ம் தேதி இரவு மர்ம விலங்கு தாக்கியதில் 3 வெள்ளாடுகளும், ஒரு கன்று குட்டியும் இறந்தன. இரண்டு கன்றுகுட்டிகள் உயிருக்கு போராடி வருகின்றன.இந்த கிராமத்தில் செஞ்சி வனத்துறையினர் நேரில் ஆய்வு செய்தனர். வனவிலங்கு கடித்த பல் தடம் மற்றும் கால் தடத்தை கொண்டு கால்நடைகளை தாக்கியது நாய்கள் இல்லை என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து எந்த வகை விலங்கு என்பதை கண்டறிய கொங்கரப்பட்டு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர்.நேற்று காலை இதில் எந்த விலங்கும் பதிவாக வில்லை. வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மர்ம விலங்கு நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
19-Jun-2025
21-Jun-2025