உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

மயிலம்: ரெட்டணையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.மயிலம் அருகே உள்ள ரெட்டணை கிராமத்தில் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, ரிவர்ஸ் அரிமா சங்கம் சார்பில் கண் சிகிச்சை முகாம் நடந்தது. முகாமிற்கு அரிமா சங்க தலைவர் குமரகுரு ஏழுமலை தலைமை தாங்கினார். குருமூர்த்தி முன்னிலை வகித்தார். பொருளாளர் அசோக் குமார் வரவேற்றார்.இதில் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் தூர பார்வை, கிட்ட பார்வை, கண் குறைபாடுகள் குறித்த நோய்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை அளித்தனர்.முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் குமுதா ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் ராஜ்பரத், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆனந்த் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குருமூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ