உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இலவச சிறப்பு மருத்துவ முகாம்

இலவச சிறப்பு மருத்துவ முகாம்

விழுப்புரம்: விழுப்புரத்தில், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தென்மண்டல காது, மூக்கு, தொண்டை, அலர்ஜி, ஆஸ்துமா ஆராய்ச்சி மையம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.ஆராய்ச்சி மையத்தில் நடந்த முகாமிற்கு, இந்திய மருத்துவ சங்க விழுப்புரம் கிளை தலைவர் கோவிந்தராஜி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் திருமாவளவன், மாவட்ட காச நோய் பிரிவு துணை இயக்குனர் சுதாகர், டாக்டர் தங்கராசு உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். தென்மண்டல காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி மைய டாக்டர் வெற்றிவேல் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர்.முகாமில், அலர்ஜி, ஆஸ்துமா நோய்களுக்கான விழிப்புணர்வு மற்றும் இலவச நுரையீரல் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட்டது. 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முகாமில் 60 பேருக்கு இலவச நுரையீரல் பரிசோதனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !