மேலும் செய்திகள்
ஏழு விளையாட்டுகளுக்கு கோடை கால இலவச பயிற்சி
22-Apr-2025
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கான கோடைகால இலவச பயிற்சி முகாம் நாளை 25ம் தேதி துவங்குகிறது.கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் செய்திக்குறிப்பு:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை 25ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை கோடைகால பயிற்சி முகாம் நடக்க உள்ளது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர்கள் மூலம் தடகளம், கால்பந்து, கைப்பந்து, கபடி, மல்லர்கம்பம் ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த முகாமில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். காலை 6.00 மணி முதல் 8.30 வரையிலும், மாலை 4.00 மணி முதல் 6.30 வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.பயிற்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு தினந்தோறும் ஊட்டச்சத்து வழங்குவதுடன், பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த முகாமில் பயிற்சி கட்டணம் ஏதுமில்லை. கலந்து கொள்ள விரும்புவோர் தங்கள் பெயர்களை 7401703485 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். நாளை மறுநாள் 25ம் தேதி கீழ்பெரும்பாக்கம், அரசு கலை கல்லுாரி, மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் காலை 7.30 மணிக்கு நடக்கும் துவக்க விழாவில் நேரடியாக சென்று பங்கேற்கலாம். இந்த பயிற்சியில் மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
22-Apr-2025