கிரீன் பாரடைஸ் பள்ளியில் புதியவர்கள் தினம்
திண்டிவனம்; திண்டிவனம் அடுத்த ரெட்டணை கிரீன் பாரடைஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில், புதியவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.எல்.கே.ஜி.,வகுப்புகளில் புதிதாக சேர்ந்த மாணவர்களை, வரவேற்கும் விதமாக பள்ளி கலையரங்கத்தில் நடந்த விழாவிற்கு, துணை முதல்வர் சங்கீதா வரவேற்றார். பள்ளி தாளாளர் சண்முகம், பள்ளியில் குழந்தைகள் எவ்வாறு மேம்படுத்தப்பட போகிறார்கள் என்பது குறித்து பெற்றோர்களுக்கு விளக்கினார்.முதன்மை இயக்குனர் வனஜா வரவேற்று, அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்து அட்டை வழங்கினார். நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.