உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரங்கநாதர் கோவிலில் கருட சேவை உற்சவம்

ரங்கநாதர் கோவிலில் கருட சேவை உற்சவம்

செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு கருட சேவை உற்சவம் நடந்தது.செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் செஞ்சி தாலுகா வாணிய வைசியர் சங்கம் சார்பில் 50வது ஆண்டு கருட சேவை உற்சவம் நடந்தது. காலை 6:00 மணிக்கு ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய ரங்கநாதருக்கு விசேஷ அர்சனையும், மகா தீபாராதனையும் நடந்தது. மஸ்தான் எம்.எல்.ஏ., உற்சவ ரதத்தை இழுத்து விதி உலாவை துவக்கி வைத்தார். சிங்கவரம் கிராம மாட விதிகள் மற்றும் செஞ்சி காந்தி பஜார் வழியாக வீதி உலா நடந்தது. இதில் ஒன்றிய சேர்மன் விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் குணசேகர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை