மேலும் செய்திகள்
அரசு டாக்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
12-Aug-2025
விக்கிரவாண்டி: அரசு டாக்டர்கள் சங்க ஆலோசனை கூட்டம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் நடந்தது. சங்கத் தலைவர் சம்பத் தலைமை தாங்கினார். செயலாளர் வினோத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசு டாக்டர்கள் பதவி உயர்வு பெற்று ஓராண்டு முடியாதவர்கள் தற்போது நடைபெற உள்ள பணி மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க முடியாது என அரசு தெரிவித்துள்ளது. இதனால் சீனியர் டாக்டர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். ஜூனியர் டாக்டர்கள் காலியிடங்களை எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு, வரும் பணியிட மாறுதல் கலந்தாய்வில் அனைத்து டாக்டர்களும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். மேலும், பதவி உயர்வு.பணியிட மாறுதல் கலந்தாய்வை காலம் தாழ்த்தாமல் ஆண்டு தோறும் மார்ச் மாதம் நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மான கோரிக்கையை மனுவாக சுகாதார துறை அமைச்சருக்கும், சுகாதார துறை செயலாளரும் சங்கம் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.
12-Aug-2025