உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சைக்கிள் போட்டியில் அரசு பள்ளி மாணவிகள்  முதலிடம்

சைக்கிள் போட்டியில் அரசு பள்ளி மாணவிகள்  முதலிடம்

விக்கிரவாண்டி: அக். 30-: சைக்கிள் போட்டியில் எடப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர். விழுப்புரம் வருவாய் மாவட்ட அளவில் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு நடந்த சாலையோர சைக்கிள் ஓட்டும் போட்டியில் எடப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 6 ம் வகுப்பு மாணவி கவுஷிகா, 14 வயதிற்குட்பட்ட பிரிவிலும், பிளஸ் 1 மாணவி அபிநயா 19 வயதிற்குட்பட்ட பிரிவிலும் பங்கேற்று முதலிடம் பிடித்தனர். இதன் மூலம் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றனர் . மேலு ம் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் மூலம் மாவட்ட அளவில் நடந்த அதி விரைவு சைக்கிள் ஓட்டும் போட்டியில், மாணவி கவுஷிகா பங்கேற்று முதலிடம் பிடித்து, பரிசுத் தொகை ரூபாய் 5 ஆயிரத்தை வென்றார். வெற்றி பெற் ற இரு மாணவிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன்,தலைமை ஆசிரியை லட்சுமி, உ டற்கல்வி ஆசிரியர் அரிதாஸ், பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை