உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும்: காட்ராம்பாக்கம் ஊராட்சி தலைவர் கோரிக்கை

அரசு உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும்: காட்ராம்பாக்கம் ஊராட்சி தலைவர் கோரிக்கை

'காட்ராம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்' என ஊராட்சி தலைவர் வில்வமணி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:வானுார் ஒன்றியம், காட்ராம்பாக்கம் ஊராட்சியில் 3000 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். காட்ராம்பாக்கம் ஊராட்சி தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து, நான் எனது பகுதி மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன்.குறிப்பாக அரசின் நிதி மற்றும் என்னால் முடிந்த சொந்த நிதியைக் கொண்டும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு முக்கிய பங்கு அளித்து வருகிறேன். இந்த பகுதியில் துாரத்தில் இருந்து அரசு துவக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ, மாணவியர்கள் நடந்தே வரும் நிலை இருந்தது.இதைக் கருத்தில் கொண்டு அரசு மூலம், பள்ளிக்கு ஆம்னி வேன் பெற்று தரப்பட்டுள்ளது. தற்போது, சின்ன காட்ராம்பாக்கம், முல்லை நகரில் இருந்து பைபாஸ் சாலை வழியாக அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, மாணவ, மாணவியர்கள் நடந்து வருகின்றனர்.அவர்களின் நலன் கருதி அரசு பள்ளிக்கு, பஸ் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். இப்பகுதிக்கென தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து கருமகாரிய கொட்டகை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். மேலும், 2 கருமகாரிய கொட்டகை அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இப்பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி வரை மட்டுமே உள்ளது. இந்த பகுதி மாணவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பைத் தொடர வானுார், புள்ளிச்சப்பள்ளம் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.எனவே, அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதியில் உள்ள அனைத்து உட்புற சாலைகளுக்கும், வாய்க்கால், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.குற்ற சம்பவங்களைத் தடுப்பதற்கு, சின்ன காட்ராம்பாக்கம், அரசுப் பள்ளி, புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் நான்கு கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளேன். இன்னும் எனது பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முழு முயற்சி மேற்கொள்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ