மேலும் செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
06-Sep-2025
மயிலம்: மயிலம் அடுத்த கொல்லிங்குணம் பவ்டா கலை அறிவியல் கல்லுாரியில் 15வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு, தாளாளர் ஜாஸ்லின் தம்பி தலைமை தாங்கினார். செயலாளர் பிரபல ஜெரோஸ் முன்னிலை வகித்தார். முதல்வர் சுதா கிருஸ்டி ஜாய் வரவேற்றார். சிவக்குமார் எம்.எல்.ஏ., மாணவ, மாணவியர் 762 பேருக்கு பட்டம் வழங்கி பேசினர். விழாவில், மஸ்தான் எம்.எல்.ஏ., மயிலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் மணிமாறன், கவுன்சிலர் சம்சுதீன், பவ்டா கல்வி நிறுவன துணைத் தலைவர் அல்பினா ஜாஸ், நிர்வாக அலுவலர் மோகனசுந்தரம், ஒருங்கிணைப்பாளர் டேவிட் ஆனந்த், ராஜேந்திரன், துணை முதல்வர் சேகர், பவ்டா இயக்குநர் பழனி உட்பட பலர் பங்கேற்றனர்.
06-Sep-2025