உள்ளூர் செய்திகள்

 பட்டமளிப்பு விழா

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஹிந்தி பிரேமி மண்டலி சார்பில் பட்டமளிப்பு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் மாணவர்களின் மொழியறிவு கண்காட்சி நடந்தது. தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபா முதல் உபதலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். ஹிந்தி பிரேமி மண்டலி செயலர் அனுஷா வரவேற்றார். தலைவர் ப்ரீத்தா துவக்க உரையாற்றினார். இரண்டாம் உப தலைவர் சுப்ரமணியம், ஹிந்தி பிரசார சபாவில் ஹிந்தி தேர்வுகள் முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். தொடர்ந்து, மொழியறிவு கண்காட்சியில் மாணவர்கள் தங்களின் மொழியறிவை வெளிப்படுத்தும் விதமாக அறிவியல், வரலாறு, இலக்கியம் சம்பந்தபட்ட திட்டங்களை காட்சிப்படுத்தி விளக்கிய 50 மாணவர்களுக்கும், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். செயற்குழு உறுப்பினர் செந்தில்குமரன் வாழ்த்தி பேசினார். ஹிந்தி பிரேமி மண்டலி பொருளாளர் ஜெயலட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை