உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டிராபிக் சிக்னலில் பசுமை நிழல் பந்தல்

டிராபிக் சிக்னலில் பசுமை நிழல் பந்தல்

விழுப்புரம் : தினமலர் செய்தி எதிரொலியால், விழுப்புரம் நான்கு முனை சிக்னலில் பசுமை நிழல் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டது. விழுப்புரத்தில் காலை 9.00 மணிக்கு துவங்கும் வெயில் படிப்படியாக அதிகரித்து பகல் முழுதும் சுட்டெரிக்கிறது. சாலையில் இருந்து எதிரொலிக்கும் அனல் காற்றால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். விழுப்புரம் நான்கு முனை சிக்னலில் பகல் நேரத்தில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் வெயில் தாக்கத்தால் மயங்கி விழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். கடந்தாண்டு தனியார் அமைப்பு சார்பில் சென்னை, திருச்சி மார்க்க சாலைகளில் நிழல் தரும் பசுமை பந்தல் (கிரீன் நெட்) அமைக்கப்பட்டது. இந்தாண்டும் பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என தினமலரில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக விழுப்புரம் நான்கு முனை சிக்னலில், சென்னை, திருச்சி, புதுச்சேரி மார்க்க சாலைகளில் நிழல் தரும் பசுமை பந்தல் (கிரீன் நெட்) நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டது. பசுமை பந்தலை நகராட்சி சேர்மன் தமிழ்செல்வி பிரபு, ஏ.எஸ்.பி., ரவிந்திரநாத் குப்தா ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர். பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி பழங்கல் வழங்கப்பட்டது. போக்குவரத்து சப்இன்ஸ்பெக்டர்கள் குமாரராஜா, விஜயரங்கன், தி.மு.க., நகர செயலாளர் சக்கரை, இந்திய மருத்துவ சங்கம் நிர்வாகிகள் கோவிந்தராஜ், திருமாவளவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை