குறைகேட்புக் கூட்டம்: 410 மனுக்கள் குவிந்தன
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, டி.ஆர்.ஓ., அரிதாஸ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில், முதியோர் உதவித்தொகை, வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 410 மனுக்கள் பெறப்பட்டது. கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் விஜயசக்தி, துணை கலெக்டர் விஜயா, உதவி திட்ட அலுவலர் (உட்கட்மைப்பு) சுரேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.